×

மொரப்பூர் பகுதியில் நிலக்கடலை விதைப்பு பணி தீவிரம்

அரூர், டிச.12: மொரப்பூர் பகுதியில், நிலக்கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்த நிலையில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் நிலத்தில் ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடை விதைப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். விதைத்த நாளில் இருந்து 3 மாதத்திற்குள் அறுவடைக்கு வரும் என்பதால் நிலக்கடலை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் நவீன முறையை தவிர்த்து பாரம்பரிய முறைகளில் ஏர் பூட்டி நிலத்தை உழுது நிலக்கடலையை பயிரிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலக்கடலை விதைத்த 3 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால், பெரும்பாலான பகுதியில் கார்த்திகை மாத பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டு வருகின்றனர். நவீன முறையை கைவிட்டு, பாரம்பரிய முறையில் ஏர் ஓட்டி உழுது நிலக்கடலையை விதைத்தால் தான் விளைச்சல் நன்றாக இருக்கும். அவ்வப்போது லேசான மழை பெய்தாலே நிலக்கடலை நன்றாக விளைச்சலை தரும். சென்ற பருவத்தில் நிலக்கடலை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. எனவே, இப்பருவத்திலாவது விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

Tags : area ,Morpore ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...